Print this page

ரணிலிடம் பசிலிடம் கூறிய இரகசியம் என்ன?

நாடு திரும்பிய ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நிறுவுனர் பசில் ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முக்கியமான தகவலொன்றை தெரிவித்துள்ளார்.

அதனை அடுத்தே, புதிய கூட்டணிக்கான தலைமை பொறுப்பையும் பிரதமர் வேட்பாளர் நியமனத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு, ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார் என அறியமுடிகின்றது.

2020 ஓகஸ்ட் மாதம் வரையில், எந்தவொரு தேர்தலும் நடத்துவதில்லை என்ற தீர்மானத்துக்கு, தற்போதைய அரசாங்கம் வந்துள்ள​து என்று ரணிலிடம் பசில் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் என்ற ரீதியில், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் உள்வீட்டுப் பிரச்சினைகள் பல உள்ளதால், அவற்றுக்குத் தீர்வு கண்ட பின்னரே, தேர்தலை நோக்கி நகர்வது உசிதமானதென்றும், ரணிலிடம் பசில் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கு, இவ்வருடம் ஓகஸ்ட் மாதம் வரையில் கால அவகாசம் இருப்பதால், அதுவரையில் நாடாளுமன்றத்தைக் கலைக்காமலும், அவசரப்பட்டு தேர்தலை நோக்கி நகராமலிருப்பதற்கே அரசாங்கம் யோசித்து வருவதாகவும், அவர் தெரிவித்துள்ளாரென்று அறியக் கிடைக்கிறது.