Print this page

'என்ன சொன்னாலும் வரமாட்டேன்'

"யார், என்ன சொன்னாலும் தேசிய அரசாங்கதை அமைப்பதற்கு, யாருடனும் இணையமாட்டேன்" என அனுராதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.

"ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, நல்லாட்சி அரசாங்கத்தை அமைத்தது. எனினும், அந்த ஆட்சிக்கு நான்கு வருடகாலத்துக்குள்ளேயே முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. அதிலிலிருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் விலகிக்கொண்டது. நல்லாட்சியில் ஏற்பட்டிந்த குறைபாடுகளை ஜனாதிபதியிடம் தெரிவித்திருந்தேன்" என்றார்.

அனுராதபுரத்தில் கருந்தன்குளத்திலுள்ள தன்னுடைய வாசஸ்தலத்தில் நடத்திய (27) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Last modified on Sunday, 27 January 2019 23:27