Print this page

பூஜிதவுக்கு பிணை : வெளிநாடு செல்ல தடை

February 05, 2020

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

தனக்கு பிணை வழங்குமாறு கோரிக்கை விடுத்து முன்வைக்கப்பட்ட சீராய்வு மனு மீதான விசாரணையின் போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, கொழும்பு மேல் நீதிமன்றத்தால், இன்று முற்பகல் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக, இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்ட போதும், பின்னர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, பிணையில் விடுவிக்கப்பட்ட இருவரும் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.