Print this page

காலி முகத்திடத்தில் “ஆர்ப்பாட்ட இடம்”

February 05, 2020

“ஆர்ப்பாட்ட இடம்” என்​றொரு அறிவித்தல் பலகை, காலி முகத்திடலில், எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்க உருவச்சிலை இருக்கும் பகுதியில் நாட்டப்பட்டுள்ளது.

எவ்விதமான முன்னறிவித்தலும் உத்தியோகபூர்வ அறிவித்தலும் இன்றி​யே இந்த பலகை நாட்டப்பட்டுள்ளது.

காலிமுகத்திடல் ஊடாக பயணிப்போர் இந்த அறிவித்தல் பலகையை பார்வையிடலாம்.

ஜனாதிபதி செயலக அதிகாரிகளால், அந்த இடம் இதற்கு முன்னதாக, ஒதுக்கப்பட்டிருந்தது எனினும், அவ்விடத்திலேயே “ஆர்ப்பாட்ட இடம்” என்ற அறிவித்தல் பலகை நாட்டப்பட்டுள்ளது.

காலி முகத்திடல் வீதியை மறித்து, கடந்தவாரம் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதனால், அந்த வீதியின் ஊடாக போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, பல்கலைக்கழக மாணவர்கள் தற்போது முன்னெடுக்கும் ஆர்ப்பாட்டத்தால், நகரசபை மண்டப பகுதியில் கடுமையான வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

.