Print this page

30 இலட்சத்து 35,143 பேர் “குடி” மன்னர்கள்

February 05, 2020

இலங்கையில் வாழும் மக்களில், 30 இலட்சத்து 35 ஆயிரத்து 143 பேர் மதுவை பயன்படுத்துகின்றனர். அதில், 10 இலட்சத்துக்கு 63 ஆயிரத்து 383 பேர், நாளாந்தம் மதுபானம் பயன்படுத்துகின்றனர் என ஆய்வொன்றின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மதுபான பயன்பாடு தொடர்பில், 2019 ஆம் ஆண்டு, ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு தேசிய வாரியம் போதைப்பொருள் தடுப்பு தொடர்பான ஜனாதிபதி பணிக்குழு, இலங்கை பொலிஸார் இணைந்து மேற்கொண்ட ஆய்விலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதனடிப்படையில், மதுபானம் பயன்படுத்தும் ஆண்களின் எண்ணிக்கை 30 இலட்சத்து 14 ஆயிரத்து 557 ஆகும். பெண்களில் 20 ஆயிரத்து 586 பேர் மதுபானம் அருந்துகின்றனர்.

18 வயதுக்கு கீழ் பட்ட குழுவில், 1 இலட்சத்துக்கு 21 ஆயிரத்து 170 ஆண்கள் மதுபானம் பருகின்றனர். 906 பெண்கள் மதுபானம் பருகின்றனர்.

அந்த அறிக்கையின் பிரகாரம் மத்திய மாகாணத்தில் 4 இலட்சத்துக்கு 45 ஆயிரத்து 29 பேர் மதுபானம் பயன்படுத்துகின்றனர். அதில், 4 இலட்சத்துக்கு 42 ஆயிரத்து 529 பேர் ஆண்கள் என்றும், 2500 பேர்​ பெண்கள் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.