Print this page

கரு அதிரடி அறிவிப்பு- பதவியை துறக்க தயார் என்கிறார்

February 08, 2020

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எதிர்க்கட்சித் தலைவர் பதவிப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, புதிய அரசியப் கூட்டணியை உருவாக்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டு நிலையில், அதன் பொதுச் செயலாளர் நியமனத்துக்கு அங்கீகாரம் பெறுக்கொள்வது தொடர்பில், கருத்து முரண்பாடுகள் நிலவுகின்றன.

இந்நிலையில், சபாநாயகர் கரு ஜயசூரிய அதிரடியான அறிவிப்பொன்றை விடுத்துள்ளார்.

சபாநாயகர் பதவியிலிருந்து விலகுவதற்கு தான் தயார் என்றும் ”கரு சபாநாயகர்” என்று அழைக்கக் கூடிய நபரொருவரை தெரிவு செய்யுமாறு சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளார். 

 

தன்னுடைய பதவிக்காலத்தில் நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அந்தப் போராட்டமும், அதிலிருந்து கிடைத்த வெற்றியும் தனக்குத் திருப்தியளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். 

கண்டிக்கு விஜயம் செய்திருந்த சபாநாயகர் கரு ஜயசூரிய, மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டதன் பின்னரே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தன்னுடைய இந்த ஐந்து வருடகாலத்தில் தான் பயன்படுத்திய வாகனம், முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பயன்படுத்திய வாகனம் என்றும் இதன்போது குறிப்பிட்டுள்ளார். 

Last modified on Tuesday, 11 February 2020 05:39