Print this page

சம்பிக்க அதிர்ஷ்டம் சஜித் அணியில் முக்கிய பதவி

February 09, 2020

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தலைமையில் உருவாக்கவிருக்கும் புதிய அரசியல் கூட்டணியில், பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவுக்கு தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்படவுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த புதியக் கூட்டணியின் பொதுச் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவு செய்யப்பட்டுள்ளார். அவருடைய நியமனத்துக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் அங்கீகாரம் பெற்றுக்கொள்ளவேண்டு​ம் என தலைவர் ரணில் விக்கிரமசிங்க இறுக்கிப் பிடித்து, கடந்த 6 ஆம் திகதி வியாழக்கிழமை நடக்கவிருந்த செயற்குழு​க்கூட்டத்தை நாளை திங்கட்கிழமை வரையிலும் ஒத்திவைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.