Print this page

மோட்டார் சைக்கிள் ஓட்டி சகோதரிகள் கைது

February 09, 2020


நீண்ட காலமாக மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்ற அக்காவும் தங்கையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அக்கா, தங்கை ஆகிய இருவரும் 70 கசிப்பு போத்தல்களுடன் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஒரு இலட்சத்தி எட்டாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. என, தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

தங்கொட்டுவ கட்டுகெந்த பிரதேசத்தைச் சேர்ந்த இருவருக்கே இவ்வாறு வெள்ளிக்கிழமை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மிகத் தந்திரமான முறையில் மோட்டாா் சைக்கிளில் 70 கசிப்பு போத்தல்களை மறைத்து வைத்துக் கொண்டு இரபடகம திசையிலிருந்து மெட்டிகொட்டுவ திசையில்  பயணித்துக் கொண்டிருந்த போது மேகட எனும் பிரதேசத்தில் வைத்து  இவ்வாறு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என ​பொலிஸார் தெரிவித்தனர்.