Print this page

சிங்கள அரசை கேட்கிறார் ஞானசார

February 13, 2020

காலத்திற்குக் காலம் பல்வேறு விசனம் மிக்க விடயங்களைக் கூறிக்க்கொண்டு வரும் கலகொடஅத்தே ஞானசார தேரர். அடிக்கடி கருத்துக்களை முன்வைப்பதும் நீண்ட கால இடைவெளிக்குப் பின்னர் வாய்பொத்தி நிற்பதும், மீண்டும் பாரிய பேச்சு குண்டொன்றை விட்டுப் பிரபல்யமாவதும் நடந்தேறி வரும் நிகழ்வுகள்.

ஜனாதிபதித் தேர்தலில் சிங்களவர்கள் முனைப்போடு ஈடுபட்டு, சிங்கள அரசாங்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு முழுப் பங்களிப்பு நல்கியது போன்றே நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் சிங்களவர்கள் செயற்பட்டு சிங்கள அரசாங்கமொன்றைக் கட்டியெழுப்ப வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

இன்னுமே அடிப்படைவாதிகள் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள். இதனைக் கண்டும் அறியாத வண்ணம் இருக்கின்றது தற்போதை அரசாங்கம். எனவே, தற்போதைய அரசாங்கத்திற்கு விழிப்பு வரக்கூடிய முறையில் சிங்களவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து, பிளவுகளை மறந்து சிங்களத் தாயகத்தைக் கட்டியெழுப்ப புதியதொரு தலைமையை உருவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.