Print this page

1 யானைக்கு 25 இலட்சம்- பேரம் பேசுகிறார் ரணில்

February 15, 2020

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரச்சினை உக்கிரமடைந்துள்ள நிலையில், யானை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு தலா 25 இலட்சம் வழங்குவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பேரம் பேசுகின்றார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ரணில் தலைமையிலான கட்சி யானை சின்னத்திலும் சஜித் தலைமையிலான கட்சி இதயம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளன என அறியமுடிகின்றது. 

ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட முன்வரும் உறுப்பினர்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு ரணில் விக்கிரமசிங்க பேரம் பேசுகின்றார் என அறியமுடிகின்றது. 

 

இது தொடர்பில், பாராளுமன்றத்தில் கடந்த 13ஆம் திகதியன்று கட்சியின் பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார் என அறியமுடிகின்றது. 

இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர்களை தவிர, அகில விராஜ் காரியவசம், நவீன் திஸாநாயக்க, ஆசு மாரசிங்க, ரோஹினி விஜேரத்ன, முஜிபூர் ரஹூமான் ஆகியோரும் பங்கேற்றர் என அறியமுடிகின்றது. 

Last modified on Wednesday, 19 February 2020 01:43