Print this page

சாய்ந்த மருத்துக்கு புதிய பிரதேச சபை

February 15, 2020

கல்முனை மாநகர சபைக்குரிய சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவு நகர சபையாக பெயரிடப்பட்டுள்ளது. 

252ஆவது அதிகார சபையான மாநகர சபை கட்டளைச்சட்த்தின் 284 ஆவது பிரிவின் அதிகாரத்துக்கு அமைய இவ்வாறு மாற்றப்பட்டு அதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. 

 

அதனடிப்படையில் சாய்ந்தமருத்து நகரசபையின் பதவிக்காலம் 2022 மார்ச் 20 ஆம் திகதியிலிருந்து செயற்படுத்தும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.