Print this page

சவேந்திர விவகாரம்: இலங்கையை புறக்கணித்தது அமெரிக்கா

February 16, 2020

இராணுவத்தளபதி சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளமை குறித்து இலங்கை தனது ஆட்சேபனையை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவரிடம் இன்று வெளியிட்டது.

வெளிவிவகார அமைச்சில் வெளிநாட்டமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை அமெரிக்கத் தூதுவரிடம் எடுத்துரைத்தார்.

ஆனாலும் இந்த விடயம் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முடிவென்றும் இலங்கையின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவுக்கு சொல்வதாகவும் தூதுவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இலங்கை தெரிவித்துள்ள அதிருப்தியை அமெரிக்கா கவனத்திற்கொண்டாலும் தளபதி மீதான தடையை நகர்த்தாதென தெரிகிறது.

அமெரிக்காவின் இவ்வாறான தடைகள் மேலும் பலருக்கு வரலாமென்றும் கூறப்படுகிறது .