Print this page

ரிஷாத்தின் சகோதரனுக்கு பிணை

February 17, 2020

முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியூதீனின் சகோதரரான ரிப்கான் பதியூதீன், பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

போலியான ஆவணங்களை தயாரித்து, காணிகளை சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவர், கொழும்பு  பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (17) ஆஜர்படுத்திய போதே, பிணை வழங்கப்பட்டுள்ளது.

எனினும், வெளிநாடுகளுக்கு ​செல்வதற்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.