Print this page

“இதயம்” எங்களுடையது உரிமை கோரியது புதிய அணி

February 17, 2020

இதயம் சின்னத்தை தேர்தல் ஆணையகத்திடம் ஏற்கனவே பதிவு செய்துள்ளதாக தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி இன்று தெரிவித்துள்ளது.

இன்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு சென்ற அதன் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன , இதயம் சின்னத்தை தாங்கள் பதிவு செய்துள்ளதால் யாரும் அதற்கு உரிமை கோர முடியாதென தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் சஜித் பிரேமதாஸ அணியினர் இதயம் சின்னத்தை பயன்படுத்தும் கோரிக்கைக்கு தேர்தல் ஆணைக்குழு இதுவரை ஒப்புதல் வழங்கவில்லை. இந்த பின்னணியில் ஏற்கனவே இதய சின்னத்தை கோரியுள்ள சஜித் அணியினர் அதனை பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அடுத்த ஐ தே க செயற்குழுக் கூட்டத்தின்போது யானை சின்னத்திலா அல்லது அன்னம் சின்னத்திலா போட்டியிடுவது என்பது குறித்து சஜித் அணி இறுதி முடிவை எடுக்குமென சொல்லப்பட்டது.