Print this page

ராஜபக்ஷ கடத்தப்பட்டார்

February 18, 2020

கடத்தப்பட்ட ராஜபக்ஷவை தேடி முழுவீச்சில் வலை விரித்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரிபத்கொட பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றுக்கு முன்பாக பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் சாரதியான கடவத்தையை சேர்ந்த கான்ஸ்டபிள் ராஜபக்ஷ என்பவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.

முச்சக்கரவண்டியில் வந்த குழுவொன்றினால், நேற்றுக்காலை இவர் கடத்தப்பட்டார் என ​கிரிபத்கொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கான்ஸ்பிளை கடத்திய குழுவினர், பன்னலை பிரசேத்திலுள்ள வீடொன்றுக்கு கொண்டு சென்று, அங்கிருந்தவர்களிடம் காண்பித்துவிட்டு, மீண்டும் வேறு எங்கோ கடத்தி சென்றுவிட்டனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பன்னல வீட்டிலிருந்தவர்களிடம் கான்ஸ்டபிளை காண்பித்த போது, அவரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும் இரத்தக் கறை படிந்திருந்தது என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தப்பட்ட கான்ஸ்டபிள் இன்னும் கண்டறியப்படவில்லை. அ​வரை கடத்தும் போது, அங்கிருந்தவர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.