Print this page

மைத்திரியை வைத்து காய் நகர்துகிறார் மஹிந்த

February 18, 2020

ஸ்ரீ லங்கா சுதந்திர மக்கள் முன்னணி அரசியல் கூட்டணியில் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு தவிசாளர் பதவியை வழங்கியமை குறித்து அக்கட்சியின் உறுப்பினர்கள் பலர் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிப்பதாக கூறிய மைத்ரி எந்தவித ஆதரவையும் தராத நிலையிலும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் அவர் மீது விமர்சனங்கள் இருக்கும் பின்னணியிலும் அவரை கூட்டணியில் இணைப்பது மக்களிடம் எதிர்ப்பை எதிர்நோக்கவேண்டிவரலாமென கட்சியின் உறுப்பினர்கள் கட்சி உயர்மட்டத்திடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிகிறது.

இதேவேளை மைத்ரியை தவிசாளராக இணைத்ததன் மூலம் கடந்த காலங்களில் வெளிவராத ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின் உள்வீட்டு விடயங்கள் பலவற்றை வெளிக்கொணர முடியுமென ராஜபக்ச தரப்பு கருதுவதாக தெரிகிறது.

சர்ச்சைக்குரிய பல விடயங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் குறித்து மைத்ரி அரசியல் மேடைகளில் பேசும்போது அது ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்கும் மக்கள் ஆதரவை குறைக்குமென கருதப்படுவதால் அவரையும் இணைத்தே தேர்தலில் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது.