Print this page

வடக்கு, கிழக்கில் மொட்டு போட்டியிடாது

February 19, 2020

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சில மாவட்டங்களில் வெற்றிலைச் சின்னத்தில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது.

இதன்படி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட பெரும்பாலும் சந்தர்ப்பம் இருப்பதாக சுதந்திர கட்சியின் பொது செயலாளர் தரியாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

கொழும்பில் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.