Print this page

மலையேறினார் காதலன்: தூக்கில் தொங்கினார் காதலி

February 19, 2020

தன்னை கடந்த ஆறு வருடங்களாக காதலித்த, காதலன், தன்னிடம் அறிவித்துவிட்டு, சக நண்பர்களுடன் சிவனொளி பாதமலைக்கு செல்வதை பொறுத்து கொள்ளாத 18 வயதான காதலி, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே, காதலி இவ்வாறு செய்துகொண்டுள்ளார் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

வறக்கா​பொலையில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில், விசாரணைக​ள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வறக்கா​​பொல அம்பேபுஸ்ஸையைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த மாணவி, அப்பாடசாலையில் மிகவும் திறமை வாய்ந்த நடனமாடும் மாணவியாவார். அந்த மாணவி, ஆறுவருடங்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

சக நண்பர்களுடன் காதலியின் வீட்டுக்கு வருகைதந்த காதலன், சிவனொளிபாதமலைக்கு சென்றுவருவதாக காதலியிடம் தெரிவித்துள்ளார்.

யாத்திரை செல்லவேண்டாமென காதலி அடம்பிடித்துள்ளார். அக்கோரிக்கைக்கு செவிமடுக்காது. காதலன் சென்றுவிட்டார். இதனால் மனவேதனையடுத்து, காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தன்னுடைய காதலி இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார் எனக் கேள்வியுற்ற காதலன், பயணத்தை இடைநடுவிலேயே கைவிட்டுவிட்டு, வீட்டுக்கு திரும்பிவிட்டார் என அறியமுடிகின்றது.

இதுதொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வறக்கா​பொல பொலிஸார் தெரிவித்தனர்.