Print this page

கள்ள காதலியை வன்புணர்ந்த கள்ள காதலன் கைது

February 19, 2020

திருமணம் முடித்த பெண்ணின் கள்ளக் காதலன் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, அப்பெண்ணை வன்புணர்வு உட்படுத்திய சம்பவமொன்று நீர்கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

படகு சவாரிக்காக, தன்னுடைய கள்ளக் காதலியை, கள்ளக் காதலன் அழைத்துச் சென்றுள்ளார். அந்த கள்ளக்காதலுடன் அவருடைய நண்பர்கள் இருவரும் இணைந்துகொண்டுள்ளனர்.

மூவரும் இணைந்து அப்பெண்ணை கூட்டு வன்புணர்வுக்கு உட்படுது்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறையிட்டதை அடுத்து, மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்கள் அனைவரும், நீர்கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர் இதன்போதே,  6 இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இதில் முதலாவது சந்தேகநபர், கொச்சிக்கடையை வசிப்பிடமாகக் கொண்டவர். அவர் முச்சக்கரவண்டி சாரதி ஆவார்.  போதைப்பொருளுக்கு அடிமையான அவர், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நப​ரொருவரின் மனையுடன் கள்ள தொடர்பை பேணியுள்ளார். அதன்பின்னரே, இவர்கள் கூட்டு வன்புணர்ந்துள்ளனர்.