Print this page

ரணிலிடம் கெஞ்சினார் லக்ஷ்மன்

February 20, 2020

அடுத்த பொதுத் தேர்தலில் தேசியப்பட்டியில் தனக்கு இடம் ஒதுக்கித்தருமாறு முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதனால், ரணிலுக்கு மிகவும் நெருக்கமான செயற்பாடுகளில் லக்ஷ்மன் கிரியெல்ல ஈடுபட்டுள்ளார் என அறியமுடிகின்றது.

2015 ஆகஸ்ட் 17ஆம் திகதியன்று நடைபெற்ற பாராளுமன்றத் தேர்திலில், 2 இலட்சம் வாக்குகளை​ பெற்றிருந்தார். கண்டி மாவட்டத்தில் முதலிடத்திலும் இருந்தார். எனினும், அடுத்த தேர்தலில், வெற்றியீட்டுவது கடினமானது என்பதால், தேசியப்பட்டியல் எம்.பி பதவியை லக்ஷ்மன் கேட்கிறார் என அறியமுடிகின்றது,