Print this page

“19ஐ திருத்த இடமளியோம்” ஹக்கீம்

February 23, 2020

சிறுபான்மை இன மக்களுக்கு பாதிப்​பை ஏற்படுத்தும் திருத்தங்களுக்கும் தீர்மானங்களுக்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம் . அத்துட்ன, அரசியலமைப்பில் 19ஆவது திருத்தத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் ஒருபோது இணங்கமாட்டோம் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 29ஆவது பேராளர் மாநாடு  கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

 

 

Last modified on Monday, 02 March 2020 07:25