Print this page

மனோ, திகா, இராதா கருத்து வேறுபாடு

February 24, 2020

மனோ கணேசன், இராதா கிருஸ்ணன் மற்றும் திகாம்பரம் ஆகியோருக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

இதனால், நுவரெலியா மாவட்டத்தில் தனித்து மண்வெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்கு இராதாகிருஷ்ணன் தீர்மானித்துள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில், தங்களுக்கு இரண்டு ஆசனங்களை ஒதுக்கவேண்டும் என இராதாகிருஷ்ணன் கோரியுள்ளார்.

இதேவேளை, தங்களுக்கு மூன்று ஆசனங்களை ஒதுக்க வேண்டும் என திகாம்பரம் கோரியுள்ளார்.

இவ்விருவரின் கோரிக்கைகள் தொடர்பில், இருவரும் அட்டனில் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அந்தப் பேச்சுவார்த்தையில் எவ்விதமான இணக்கப்பாடும் எட்டப்படவில்லை.

அதனையடுத்து, தனிவழியில் செல்வதற்கு இராதா தீர்மானித்துள்ளார் என அறியமுடிகின்றது. 

இதனால், நுவரெலியா மாவட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறாராம் மனோ.