Print this page

மஹிந்த, மைத்திரி முக்கிய கூட்டம்

February 25, 2020

ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன முன்னணியின் முதலாவது செயற்குழு கூட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னணியின் தவிசாளர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

குறித்த கூட்டமானது இன்று மாலை 6.00 மணிக்கு அலரிமாளிகையில் இடம்பெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பான பல விடயங்கள் கலந்துரையாடப்பவுள்ளது. 

அதன்படி வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது மற்றும் தேர்தல் பிரசாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின்  செயலாளர் பசில் ராஜபக்ஷ, தேசிய அமைப்பாளர்களான விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.