Print this page

மிலிட்டரி பொலிஸ் களமிறக்கப்பட்டது

February 25, 2020

அதிகரித்துவரும் போக்குவரத்து நெரிசலைக் கையாள இராணுவம் (மிலிட்டரி பொலிஸ் ) இன்று (24) முதல் முக்கியமான வீதிகளில் நிறுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இன்று முதல் இத்திட்டத்தை செயல்படுத்த இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவுறுத்தியுள்ளார்.

காலை மற்றும் பிற்பகலில் போக்குவரத்து பொலிஸாருக்கு உதவவென இந்த இராணுவ பொலிஸ் படைப்பிரிவு நிறுத்தப்படும் என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க, கூறினார்.

அதன்படி, கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் காலை 7 மணி முதல்  10 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளில் இராணுவ போக்குவரத்து அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.