Print this page

உப்புவெளியில் 8 பேர் சிக்கினர்

திருகோணமலை - உப்புவெளி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பு நேற்று மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை முன்னெடுக்கப்பட்டதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிடியாணை பிறப்பிக்கப்பட்டமை, கஞ்சா போதைப் பொருளை வைத்திருந்தமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்களில் குறித்த 8 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேவநகர், பெரியகுளம், காந்திநகர், செல்வநாயகபுரம் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.