Print this page

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை -பகுதியில் 74 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸார் மற்றும் கடற்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவல்களை அடுத்து குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து குறித்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டனர்.