Print this page

மேசையிலிருந்து விழுந்து பாலகன் மரணம்

February 27, 2020

6 மாத குழந்தை ஒன்று மேசை ஒன்றில் இருந்து விழுந்து உயிரிழந்துள்ளது.

நவகத்தேகம பகுதியில் நேற்று (26) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

6 மாதமான தனுஜ தஹம்ச எனும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் வீட்டில் குறித்த குழந்தை தனது பாட்டியுடன் இருந்ததாக தெரியவந்துள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் மேசையில் இருந்து விழுந்த குழந்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி நவகத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.