Print this page

தினேஷின் அறிக்கையை நிராகரித்தார் மிச்லே

February 27, 2020

மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை அமைக்கும் இலங்கையின் அறிவிப்பை ஐக்கியநாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர்  நிராகரித்துள்ளார்.

இலங்கை தொடர்பான அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றுகையில் கருத்து தெரிவித்துள்ள மிச்லே பச்செலெட் இலங்கையின் உள்ளுர் பொறிமுறைகள் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ச்சியாக தோல்வியடைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக இன்னொரு ஆணைக்குழுவை அமைப்பது இந்த நடவடிக்கைகளை முன்னகர்த்தும் என தான் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் நீதி மறுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளனர்,மனித உரிமை மீறல்கள் மீண்டும் இடம்பெறும் என்பதற்கான உத்தரவாதம் இலங்கையின் அனைத்து சமூகத்தினரிற்கும் இல்லாதநிலை காணப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.