Print this page

டொபி சாப்பிட்ட மாணவன் மயங்கினார்

சிரேஷ்ட மாணவன் ஒருவினால் வழங்கப்பட்ட டொபியை உட்கொண்ட, ஆறாம் தரத்தில் கல்விப்பயிலும் மாணவன் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பேராதனை பகுதியிலுள்ள மகா வித்தியாலயத்திலேயே இவ்வாறு இடம்பெற்றுள்ளது. அந்த மாணவன், பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாணவனை  வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள், அவர், ஒருவகையான போதைப்பொருள் கலந்த டொபியை உட்கொண்டுள்ளார் என ​பாடசாலை நிர்வாகத்துக்கும் பெற்றோருக்கும் அறிவித்தனர்.

வெளிநபர்கள் சிலர் இணைந்து அந்த பாடசாலையில், 6,7 மற்றும் 8 ஆம் தரங்களில் பயிலும் மாணவர்களை இலக்குவைத்தே இவ்வாறு போதைப்பொருள் அடங்கிய டொபியை இலவசமாக விநியோகித்து வருகின்றனர்.

அவ்வாறான மாணவர்கள் போதைக்கு அடிமையானதன் பின்னர். அதனை ஒரு வர்த்தகமாக முன்னெடுப்பதற்கு அந்நபர்கள், இலவசமாக அதனை விநியோகித்துள்ளனர் என அறியமுடிகின்றது.