Print this page

தேவாலயத்தில் முஸ்லீம்கள் புகுந்ததால் பதற்றம்

ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 2 பெண்கள் உட்பட நான்கு முஸ்லீம்கள் கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் உட்புகந்ததையடுத்து அங்கு பீதி ஏற்பட்டது.

மட்டக்களப்பு புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இன்று (01) இடம்பெற்றது.

 கறித்த 4 பேரையும் மக்கள் பிடித்து பொலிசாரிடம் கொடுத்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) காலை இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கல்லடி பாலத்துக்கு அருகில் அமைந்திருக்கும் குறித்த தேவாலய ஆராதனை சம்பவதினமான இன்று காலை இடம்பெற்றுக் கொண்டிருந்தது இதன்போது இங்கு இரு பெண்கள் உட்பட 4 பேர் கொண்ட முஸ்லீம்கள் ஆலத்தினுள் உட்புகுந்தனர்.

இதனால், அங்கு ஆராதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மக்கள் பீதியடைந்ததையடுத்து அவர்களை ஆராதனையில் ஈடுபட்ட மக்கள் பிடித்து அருட்தந்தையிடம் கொடுத்து பொலிசாரிடம் ஓப்படைத்தனா.

இவ்வாறு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த  அம்பாறை இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பெண்ணின் 39 வயதுடைய வாய் பேசமுடியாத மகள்,  23 வயதுடைய மகன் , 33 வயதுடைய மருமகன் ஆகியோ​ரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.

 மகளின் நோயை குணப்படுத்துவதற்காக இரு மோட்டார் சைக்கிளில் சீயோன் தேவலாயத்துக்கு வந்ததாகவும் அங்கு ஆலயம் பூட்டியுள்ளதையடுத்து அதன் ஆராதனை வேறு இடத்தில் நடப்பதாக அறிந்து இந்த தேவாலயத்துக்குள் புகுந்துவிட்டனர் என பொலிசாரின் ஆரம்பவிசாரனையில் தெரியவந்துள்ளது 

Last modified on Monday, 02 March 2020 15:45