Print this page

பற்றி எரிகிறது பஸ்: பயணிகள் திண்டாட்டம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்து கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று, திடீரென பற்றி எரிந்துள்ளது. இதனால், அப்பகுதியில் கடும் புகைமூட்டமாக காணப்படுகிறது.

ஹம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த பஸ்ஸே, இமதுவ மற்றும் கொக்மாதுவ ஆகிய பிரதேசங்களுக்கு இடையிலான 110 மைல்கல்லுக்கு அண்மையில் தீ பற்றிக்கொண்டது.