Print this page

சஜித் கூட்டத்தை ரணில் கோஷ்டி புறக்கணிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கூட்டணியை இன்று சஜித் பிரேமதாஸ உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் அந்த கூட்டம் நடைபெறும் நிகழ்வினை ஐக்கிய தேசியக் கட்சி புறக்கணிக்கவுள்ளது.

கட்சியின் சார்பில் எவரும் இதில் கலந்து கொள்ளக் கூடாதென கட்சித் தலைவர் ரணில் உத்தரவிட்டுள்ளார்.

சஜித் தலைமையிலான அரசியல் கூட்டணியின் யாப்பு இதுவரை கிடைக்காமை , சின்னம் தொடர்பான இறுதி முடிவின்மை காரணமாக சஜித் கூட்டணியுடன் ஐக்கிய தேசியக் கட்சி இணையும் வாய்ப்பு குறைவென ரணில் நேற்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று சஜித் தலைமையில் நடக்கும் அரசியல் கூட்டணி அறிமுக நிகழ்வில் ரணில் ஆதரவு உறுப்பினர்கள் கலந்துகொள்வது சந்தேகமே.அதேசமயம் இந்த நிகழ்வு நடக்கவுள்ள அதே நேரத்தில் கட்சியின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்களை ரணில் சந்திக்கவுள்ளார்.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானை சின்னத்தில் தனித்துப் போட்டியிடுமென்ற முடிவை இதன்போது கட்சி உறுப்பினர்களுக்கு ரணில் செல்லவுள்ளார்.

Last modified on Monday, 02 March 2020 06:21