Print this page

கலைக்கும் நேரத்தை சுமணதாஸ குறிப்பார்.

பாராளுமன்றத்தை கலைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி கோத்தாப ராஜபக்ஷவுக்கு கிடைத்தவுடன் பாராளுமன்றத்தை அவ​ர் கலைத்துவிடுவார். பெரும்பாலும் இன்று நள்ளிரவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு கிடைத்துள்ள முதலாவது சந்தர்ப்பத்திலேயே பாராளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்துவிடுவார் என்று அக்கட்சியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

தேர்தலை காலந்தாழ்த்துவதால், அரசாங்கம் செல்வாக்கை இழந்துவருகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் தேர்தல் நடத்தப்படும் தினம், ஒரு நாளில் அல்லது இரண்டு நாட்களில் மாறும் என்றார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவருடை சோதிடரான சுமணதாஸ அபேகுணவர்தனவின் சோதிட ஆலோசனைக்கு அமைய, சுபநேரத்தை தீர்மானிப்பார் என்றும் அநுரகுமார எம்.பி தெரிவித்தார்.