Print this page

இலங்கை பெண்ணுக்கு கொரோனா

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இத்தாலி, பரிசிகாவில் வசிக்கும் 46 வயதான பெண்ணுக்கே இவ்வாறு கொ​ரானா வைரஸ் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அப்பெண், தனியாக அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டுள்ளார் என இத்தாலியிலுள்ள இலங்கை தூதுவராலயம் அறிவித்துள்ளது.

குறித்த பெண் தற்போது பிராசியாவில் அமைந்துள்ள வைத்தியசாலை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரின் நிலை கவலைக்கிடமானதாக இல்லை எனவும் வௌியுறவு அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் இவராவார்.