Print this page

“இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது'

இனப்பிரச்சினைக்கு சமஷ்டியின் மூலம் தீர்வு காண முடியாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுத்துறையில் நேற்று முன்தினம் வணிக நிலையம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றிய அவர், இதனைக் கூறியிருக்கின்றார்.

“ஒன்றுபட்ட நாட்டுக்குள் அதிகாரங்களைப் பகிர்வதன் மூலமே தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்.
சிலவற்றைத் தவிர, பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் இப்போது, பிளவுபடாத நாட்டுக்கள் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் காண முடியும் என்று ஏற்றுக் கொண்டிருக்கின்றன” என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

சமஷ்டியை உருவாக்க முயற்சிக்காமல் இதனை முன்னெடுக்க வேண்டும் என்றும் இதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலமும், பொதுவாக்கெடுப்பில் அங்கீகாரமும் பெற வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

தேசியப் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படுவது தான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது என்றும் இந்த முயற்சியை சீர்குலைக்க எவரையும் அனுமதிக்கக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டிருக்கின்றார்.