Print this page

ஷரியா பல்கலைகழகம், கொரோனா தடுப்பு மையம்

மட்டக்களப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஷரியா பல்கலைக்கழகத்தை, கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நபர்களை தங்கவைப்பதற்கான நிலையமாக மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கு தேவையான நடவடிக்கைகள் இலங்கை இராணுவத்தினர் முன்னெடுத்துவருகின்றன. 

இத்தாலி, தென்கொரியா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இலங்கைக்கு வருவோரே இந்த தடுப்பு நிவாரண நிலையத்தில் தங்க வைக்கப்படவுள்ளனர் என அறியமுடிகின்றது. 

இந்த மத்திய நிலையத்தில் ஒரே தடவையில் 450 நபர்களை அனுமதித்து, தங்க வைத்து சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அறியமுடிகின்றது.