Print this page

ஆளும் கட்சியின் வீட்டுக்குள் ரவி

கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, ஆளும் கட்சியின் முக்கிய அரசியல்வாதி ஒருவரின் வீட்டிலேயே மறைந்துள்ளார் என ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி பிமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது மஹிந்தவின் கள்வர் கூட்டம் ஐ.தே.கவின் அரசியல்வாதிகளின் வீடுகளிலேயே ஒளிந்திருந்தது. இப்போது ஐ.தே.கவின் கள்வர் கூட்டம் ஆளும் கட்சியினரின் வீடுகளுக்குள் மறைந்திருக்கிறது என்றார்.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணை முறி மோசடியின் பிரதான சந்தேகநபரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை கைதுசெய்வதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்கப்படவில்லை. இதிலிருந்து இந்த நாடகம் தெட்டத்தெளிவாக தெரிகிறது.

Last modified on Monday, 09 March 2020 04:53