Print this page

ஞானசார தேரருக்கு எதிராக மனு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞான சார தேரருக்கு பொதுமன்னிப்பை பரிந்துரை செய்ய வேண்டாம் என, மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரதீப் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட சட்டமாஅதிபர் மற்றும் நீதி அமைச்சரை  நேரில் சந்தித்து இந்த மனுவை கையளித்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு விவகாரத்தில் கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்து வரும் ஞானசார தேரருக்கு சுதந்திர தினத்தன்று ஜனாதிபதி  பொது மன்னிப்பளிக்கவுள்ளதாக தகவல் வெளியானது

இந்நிலையில் ஜனாதிபதி பொதுமன்னிப்புக்காக ஞானசார தேரரின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டாம் என சந்தியா எக்னெலிகொட மனு அளித்துள்ளார்.

எக்னெலிகொட கடத்தல் , காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தை அவமதித்தற்காக ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Last modified on Wednesday, 11 September 2019 01:35