Print this page

ஜனாதிபதி கோத்தா அதிரடியாக அழைப்பு

இலங்கையர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. சுற்றுலா பயணிகளுக்கு வழிகாட்டும் ஒருவருக்கே இவ்வாறு, கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டது. 52 வயதான அவர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இத்தாலி சுற்றுலா பயணிக்கு வழிகாட்டியவரே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 எனும் கொரோனா வைரஸ் இலங்கைக்குள்ளும் வியாபிக்கும் எச்சரிக்கை உள்ளது. ஆகையால் அதிலிருந்து தவிர்த்து கொள்வதற்கு அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் பரவியிருக்கும் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கு, பல்வேறு நாடுகளும் பல நடவடிக்கைளை எடுத்துள்ளன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான முதலாவது இலங்கையர், நேற்று (10) மாலை கண்டறியப்பட்டார் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இத்தாலி சுற்றுலா குழுவுக்கு வழிகாட்டிய 52 வயதான நபரே, இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளார். அவரை தனிமைப்படுத்தி, அவருக்கு தேவையான வைத்திய பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

இத்தாலி சுற்றுலா குழு பயணித்த இடங்கள், அக்குழுவினர் சந்தித்த நபர்கள் தொடர்பிலான தகவல்கள் திரட்டப்படுகின்றன.