Print this page

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுதலை

முன்னாள் கூட்டுறவு மற்றும் வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழக்கொன்றில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் அவர்  இன்றுவிடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சொத்து விவர அறிக்கையை சமர்ப்பிக்காமை  காரணமாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலேயே அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2010ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, தனது சொத்து விவர அறிக்கையை சமர்பிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது.

இதன் ஊடாக, இலஞ்ச ஊழல் சட்டத்தின் கீழ் தவறிழைத்திருப்பதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.