Print this page

21/4 இல் 3 பிள்ளைகளை இழந்த கோடீஸ்வர தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்!

கடந்த 2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தற்கொலை குண்டுத் தாக்குதலில் ஸ்கொட்லாந்தின் மிகப்பெரிய தனியார் நில உரிமையாளரின் மூன்று பிள்ளைகள் உயிரிழந்தமை சர்வதேச ரீதியில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் குழந்தைகளை இழந்த அவர்களுக்கு தற்போது இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கோடீஸ்வரர் அண்டர்ஸ் ஹோல்ச் போவ்ல்சென் மற்றும் அவரது மனைவி ஆன் ஆகியோர் டென்மார்க்கில் பிறந்த தமது குழந்தைகளை “இரண்டு சிறிய அற்புதங்கள்" என  வர்ணித்துள்ளனர்.

அத்தோடு அவர்களுக்கு பிறந்த இக் குழந்தைகளை வரவேற்பதில் அவர்கள் இருவரும் பெரும் மகிழ்சியாகவும் , மன நிறைவுடன் இருப்பதாவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த இரட்டை குழந்தைகளின் பிறப்பானது அனைவரையும் சந்தோசத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.