Print this page

பல்கலைக்கழங்களுக்கு 14 நாட்கள் விடுமுறை

கொரோன வைரஸ் அச்சம் காரணமாக, சகல பல்கலைக்கழகங்களுக்கும் இரண்டுவாரம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  

இதுதொடர்பில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க அறிவிப்பொன்றை விடுத்துள்ளார். 

இதேவோல, தேசிய கல்வியற் கல்லுரிகள், ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் ஆகியவற்றுக்குக்கும் இம்மாதம் 16ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரைக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கும் ஏப்ரல் 20ஆம் திகதி வரைக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.