Print this page

பெண் பொலிஸ் பதவிகள் அதிகரிப்பு

பெண் பொலிஸ் பதவிகள் அதிகரிப்பு

 

பொலிஸ் கான்ஸ்டபிள் முதல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வரையிலான பதவிகளில் பெண் அதிகாரிகளின் எண்ணிக்கையை 15 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழு இதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

ஆண் அதிகாரிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் பெண் அதிகாரிகளின் சதவீதம் போதுமானளவு இல்லாமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முழுமையாக பார்க்கும் போது, பெண் பொலிஸாரின் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே காணப்படுவதாகவும் பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான பிரச்சினைகளின்போது, பெண் அதிகாரிகளின் தேவை மிகவும் அவசியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தொடர்ந்தும் பெண் பொலிஸாரின் எண்ணிக்கை குறைந்த மட்டத்தில் காணப்படுவதை தவிர்த்துக்கொள்ளும் வகையில் விசேட நடவடிக்கை மேற்கொள்வது அவசியம் என, பொலிஸ் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

விசேடமாக வடக்கு - கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களுக்கு போதுமானளவு தமிழ் மொழி பேசும் பெண் பொலிஸாரை பெற்றுக்கொடுப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

பெண் பொலிஸ் பரிசோதகர் பதவிகள் 50 மற்றும் பெண் பொலிஸ் அதிகாரி  பதவிகள் 7 ஆகியவற்றை அதிகரிப்பதற்கு  தாம் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுத்திருந்தாாக பொலிஸ் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.