Print this page

லயன் குடியிருப்பில் தீ விபத்து

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரொப்கில் வாணக்காடு தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் லயன் குடியிருப்பொன்று எறிந்து நாசமாகியிருக்கின்றது.

இன்று முற்பகல் 11.45 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்தினால்12 குடும்பங்களை சேர்ந்த 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,  உடமைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக  பொகவந்தலாவை பொலிஸார் கூறியிருக்கின்றார்கள்.

தீ பரலுக்கான காரணம் தெரியாத நிலையில், பொதுமக்களும் பொலிஸாரும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.