Print this page

தயவு செய்து வீட்டில் இருங்கள்

விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ள இன்று (17) பொதுமக்கள் முடிந்தளவு வீட்டிலேயே இருக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் வலைதளத்தில் பதிவொன்றை இட்டு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

'இன்று விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து வீட்டிலேயே இருங்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்தவோ, பொது இடங்களில் கூடவோ வேண்டாம். கட்டாய தேவைக்கு ஒருவர் மட்டும் வெளியே சென்று, வீட்டிற்குள் நுழைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவுங்கள். உங்களையும் ஏனையோயும் பாதுகாக்கவும்' என, ஜனாதிபதி தனது பதிவில் கேட்டுக்கொண்டுள்ளார்.