Print this page

10 மாணவர்களுக்கு கொரோனா- ராஜித்தவிடம் விசாரணை

பாடசாலை மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன விடுத்திருந்த அறிவிப்பு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போ​தே மேற்கண்டவாறு தெரிவித்தார்.