Print this page

மட்டக்களப்பில் முன்பாதுகாப்பு

இலங்கையில் வைரஸ் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உடனடி முன்பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தேர்தல் பிரசார பணிகளுக்காக லண்டனில் இருந்து வந்த ஒருவர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் மட்டக்களப்பில் பலரை சந்தித்துள்ளதால் அந்த விடயங்களை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சு மட்டக்களப்பு அரச அதிபரை கேட்டுள்ளது.இதன்படி மட்டக்களப்பில் பலர் தனிமைப்படுத்தப்படவுள்ளனர்.