Print this page

‘இராணுவ முகாமை அமைக்க ஒப்பந்தம் செய்யவில்லை’

ஐக்கிய அமெரிக்காவின் இராணுவ தளமொன்றை இலங்கையில் அமைக்கும் வகையிலான எந்தவித ஒப்பந்தங்களும் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்படவில்லை என, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கைகள் சில நாடுகளுடன் செய்துகொள்ளப்பட்டிருந்தாலும், அவ்வாறான உடன்படிக்கை எதுவும் அமெரிக்காவுடன் இதுவரை செய்துகொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அநுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகங்களுக்கு இதனை பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன கூறியுள்ளார்