Print this page

கைதிகளுக்கு நிவாரணம்- கோத்தா ஆராய்ந்தார்

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலைமையை கவனத்தில் கொண்டு, கைதிகளுக்கும் நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆராய்ந்துள்ளார்.

சிறிய குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்துவரும் மற்றும் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் சிறையில் இருக்கும் கைதிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, இதற்கு முன்னர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ சிறைச்சாலைக்கு  விஜயம் செய்திருந்த போது, அங்கிருந்த கைதிகள் விடுத்திருந்த கோரிக்கை தொடர்பிலும் ஆராயப்பட்டது. 

சட்டத்தரணிகள் குழு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் உள்ளிட்ட குழுவினர் அடங்கிய குழு, இதுதொடர்பில் ஆராய்ந்துள்ளது. வெகுவிரைவில் அவர்களுக்கான நிவாரணங்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல் விடுக்கப்படும். என ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.