Print this page

சுங்க பதில் பணிப்பாளராக சுமணசிங்க நியமனம்

இலங்கை சுங்க திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிப்பாளர் நாயகமாக இலங்கை பாதுகாப்புச் சேவையின் ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை சுங்கப் பணியாளர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இலங்கை சுங்க சேவையிலோ அல்லது நிர்வாக சேவை தகுதியோ இல்லாத ஒருவர் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிலையிலேயே நிதியமைச்சின் மேலதிக செயலாளர் எச்.ஜி. சுமணசிங்க இலங்கை சுங்கத்தின் பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.